×

அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

பிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ‘சத்யா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.
 
அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்பிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

இதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ‘சத்யா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.

சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்.

என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி’ என்று கூறினார்.

அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல் அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

From around the web

Trending Videos

Tamilnadu News