×

’எங்க வீட்டுப் பிள்ளை’ இல்லை ’நம்ம வீட்டுப் பிள்ளை’ – சிவகார்த்திகேயனின் அடுத்தப் பட தலைப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதியப் படத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியோடு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக
 
’எங்க வீட்டுப் பிள்ளை’ இல்லை ’நம்ம வீட்டுப் பிள்ளை’ – சிவகார்த்திகே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதியப் படத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியோடு முழுவதுமாக முடிவடைந்துள்ளது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு  எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அந்தப் தலைப்புக்கு அந்த நிறுவனம் ஒத்துக்கொள்ளாத நிலையில் அந்த தலைப்பில் லேசான மாற்றம் செய்து ’நம்ம வீட்டுப் பிள்ளை’ என வைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் ஆயுதபூஜை வெளியீடாக வெளியாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News