×

ஸ்மித்தை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் அவுட்டாக்க முடியவில்லை – சச்சின் அலசல் !

டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்துவரும் ஸ்டீவ் ஸ்மித்தை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் அவுட் ஆக்க முடியவில்லை என விவரித்துள்ளார். நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 774 ரன்களைக் குவித்து சாதனைப் புரிந்தார். இந்த தொடரில் அவருக்கு நெருக்கமாகக் கூட யாரும் ரன் குவிக்கவில்லை. இந்நிலையில் அவரை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்
 
ஸ்மித்தை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் அவுட்டாக்க முடியவில்லை – சச்சின் அலசல் !

டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்துவரும் ஸ்டீவ் ஸ்மித்தை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் அவுட் ஆக்க முடியவில்லை என விவரித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 774 ரன்களைக் குவித்து சாதனைப் புரிந்தார். இந்த தொடரில் அவருக்கு நெருக்கமாகக் கூட யாரும் ரன் குவிக்கவில்லை. இந்நிலையில் அவரை ஏன் இங்கிலாந்து பவுலர்களால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ ஸ்மித்தின் உத்தி சிக்கல் நிறைந்தது. ஆனால் அவரது மனம் ஒருங்கிணைந்த ஒன்று. இதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. முதல் டெஸ்ட்டில் அவரை ஸ்லிப் திசையில் அவுட் ஆக்க நினைத்தனர். ஆனால் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வந்து லெக் ஸ்டம்பைக் காட்டி விளையாடினார். அடுத்த டெஸ்ட்டில் லெக் ஸ்லிப், லெக் கல்லி  வைத்து ஜோப்ரா ஆர்ச்சரை வைத்து அவுட் ஆக்க முயன்றனர். இந்த முறை அவர் கொஞ்சம் ஆடிப்போனார். அதனால் தான் பவுன்சரில் அடிபட்டார். ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் உத்தியை மாற்றினார், முன்னால் உடலை நீட்டி பவுன்சரின் லைனிலிருந்து சற்றே விலகி பந்தை ஆடாமல் குனிய முடிந்தது. இதனால்தான் சிக்கல் நிறைந்த அவரது உத்தி பவுலர்களுக்கு சவாலாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News