×

திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

நடிகர் கமல்ஹாசன் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கோலிவுட்டின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கட்சியில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருசில நடிகர்கள் மட்டுமே கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஷால் உள்பட பலர் குறைந்தபட்சம் கமல்ஹாசனுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை கமல் கட்சியில் நேற்று சினேகன், பரணி, வையாபுரி, ஆர்.கேசுரேஷ், ஸ்ரீப்ரியா, கமீலா நாசர்
 
திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

நடிகர் கமல்ஹாசன் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கோலிவுட்டின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கட்சியில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருசில நடிகர்கள் மட்டுமே கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஷால் உள்பட பலர் குறைந்தபட்சம் கமல்ஹாசனுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை

கமல் கட்சியில் நேற்று சினேகன், பரணி, வையாபுரி, ஆர்.கேசுரேஷ், ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகிய திரையுலக பிரபலங்கள் மட்டுமே இணைந்தனர். இவர்களில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா நாசர் ஆகியோர்களுக்கு கமல் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவிருப்பதால் அவருடைய கட்சியில் இணையும்பொருட்டே பல திரையுலக பிரபலங்கள் கமல் கட்சியில் சேரவில்லை என்று கூறப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News