×

செல்ஃபி எடுக்க 100 ரூபாய்… தனது சம்பளம் முழுவதும் கட்சிக்கே – நிதி திரட்டும் வைகோ !

வைகோ கடந்த சில நாட்களாக தனது கட்சி சார்பாக செல்லும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தனக்கு சால்வை அணிவிக்கக் கூடாது மற்றும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என அன்புக் கட்டளைகள் விதித்து வருகிறார். பதிலாக தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் 100 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்து எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில்
 
செல்ஃபி எடுக்க 100 ரூபாய்… தனது சம்பளம் முழுவதும் கட்சிக்கே – நிதி திரட்டும் வைகோ !

வைகோ கடந்த சில நாட்களாக தனது கட்சி சார்பாக செல்லும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தனக்கு சால்வை அணிவிக்கக் கூடாது மற்றும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என அன்புக் கட்டளைகள் விதித்து வருகிறார். பதிலாக தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் 100 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்து எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது.

மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டை முழுநாள் நிகழ்வாக நடத்த அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்குப் பெரிதாக செலவாகும் என கட்சி நிர்வாகிகள் கூறி, மாலை நிகழ்வு மட்டும் போதும் என ஆலோசனை வழங்கினர்.

அப்போது பேசிய வைகோ ‘ நமது கட்சி ஒன்றும் மிட்டா மிராசுகளின் கட்சி அல்ல. என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான மாதச் சம்பளத்தை கட்சி அலுவலகத்திற்கே அனுப்ப சொல்லிவிட்டேன். அந்த பணத்தை வைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கான செலவுகளை செய்யலாம்.’ எனத் தெரிவித்துள்ளார். வைகோவுடன் செல்பி எடுத்துக் கொண்டவர்கள் கொடுத்த அன்பளிப்பு மூலம் ரூ.1,19,050 நிதியாகக் கிடைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News