×

திடீர் திருப்பம் ; நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Speaker Dhanapal – சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரி திமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ‘சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் வலியுறுத்தப்போவதில்லை. அன்றைய அரசியல் சூழ்நிலையில் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். தற்போது அது தேவையில்லை எனப்படுவதால்
 
திடீர் திருப்பம் ; நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Speaker Dhanapal – சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரி திமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ‘சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் வலியுறுத்தப்போவதில்லை. அன்றைய அரசியல் சூழ்நிலையில் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். தற்போது அது தேவையில்லை எனப்படுவதால் அதை வாபஸ் பெறுவதாக முடிவெடுத்துள்ளோம். எனவே, சபாநாயகரின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை’ என அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு போதுமான ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் வெற்றி பெறாது என்பதை தெரிந்தே திமுக தனது முடிவை மாற்றியிருப்பதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News