×

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி : விரைவில் அறிவிப்பு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டதாத செய்திகள் கசிந்துள்ளது. ஜெ.வின் மறைவிற்கு பின் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே அதிமுக தலைமை செயல்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக – அதிமுக கூட்டணி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கவில்லை. அதேசமயம் சமீப காலமாகவே துணை சபாநாயகர் தம்பிதுரை
 
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி : விரைவில் அறிவிப்பு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டதாத செய்திகள் கசிந்துள்ளது.

ஜெ.வின் மறைவிற்கு பின் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே அதிமுக தலைமை செயல்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக – அதிமுக கூட்டணி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கவில்லை.

அதேசமயம் சமீப காலமாகவே துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவிற்கு எதிராகவே பேசி வருகிறார். தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். பாஜக இதுவரை தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை” என வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். ஆனால், பழனிச்சாமியும், பன்னீரும் கூட்டணி குறித்து சூசகமாகவே பதில் கூறி வருகின்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி : விரைவில் அறிவிப்பு?

ஜெயலலிதா இல்லாத நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே பன்னீர் விரும்புகிறாராம். ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. ஆனால், தன் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்திகள் காரணமாக கூட்டணிக்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிமு, பாஜக, தேமுதி, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் எனத்தெரிகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை திரைமறைவில் தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டில் எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிகள் என்பதில் இழுபறிகள் நீடித்து வருகிறது. அதிமுக 40, பாஜக 10 தொகுதிகள் எனவும் மீதமுள்ள 10 தொகுதிகள் இதர கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத்தெரிகிறது.

பாஜக தேர்தல் பிரச்சார கூட்டம் திருப்பூரில் வருகிற 10ம் தேதி நடக்கவுள்ளது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அந்த மேடையிலேயே அதிமுக – பாஜக கூட்டணியை அவர் அறிவிப்பார் எனவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News