×

ஐஸ்வர்யா ராயைக் இழிவுபடுத்திய முன்னாள் காதலர் – சர்ச்சைக்குப் பின் மன்னிப்பு !

எக்ஸிட் போல் தேர்தல் முடிவுகளை வைத்து ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவாக விமர்சனம் செய்த விவேக் ஓப்ராய் மன்னிப்புக் கேட்டுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த கருத்துக்கணிப்பு முடிவைப் பற்றி கேலி செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஐஸ்வர்யாராய் ஆரம்பகாலத்தில் விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் ஆகியோரைக் காதலித்து வந்தார். ஆனால் அதன் பின்னர்
 
ஐஸ்வர்யா ராயைக் இழிவுபடுத்திய முன்னாள் காதலர் – சர்ச்சைக்குப் பின் மன்னிப்பு !

எக்ஸிட் போல் தேர்தல் முடிவுகளை  வைத்து ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவாக விமர்சனம் செய்த விவேக் ஓப்ராய் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த கருத்துக்கணிப்பு முடிவைப் பற்றி கேலி செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஐஸ்வர்யாராய் ஆரம்பகாலத்தில் விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் ஆகியோரைக் காதலித்து வந்தார். ஆனால் அதன் பின்னர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.  இதை அநாகரீகமாக விமர்சனம் செய்யும் விதமாக பகிர்ந்திருந்த புகைப்படத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணை இந்த அளவுக்கு யாராலும் இழிவுபடுத்த முடியாது என்றும் பலர் காட்டமாகவே விவேக் ஓபராயை விமர்சனம் செய்தனர்,.

இதற்கு தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. முதலில் தான் செய்ததில் தவறு எதுவும் இல்லை எனக் கூறிய விவேக் ஒப்ராய் இன்று தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து அந்த மீமை நீக்கியுள்ளார்.  இதுகுறித்த விளக்கத்தில் அவர் ‘சில நேரங்களில் முதல் தடவைப் பார்க்கும்போது சில விஷயங்கள் தவறாக தெரிவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்பவனில்லை. அதனால் நான் பரிகாரமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News