×

அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே! – சோகத்தில் ஸ்டாலின்

M.K.Stalin upset with results – நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் திமுக தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொருத்தவரை மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக
 
அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே! – சோகத்தில் ஸ்டாலின்

M.K.Stalin upset with results – நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் திமுக தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொருத்தவரை மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது.

அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே! – சோகத்தில் ஸ்டாலின்

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, இதில் திமுக அதிக இடங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தற்போதையை நிலவரப்படி திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

அதிமுகவை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி கவலை இல்லை. இடைத்தேர்தலின் முடிவுகளே முக்கியம். தற்போதைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் எப்படியும் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே, இன்னும் 2 வருடத்திற்கு அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் அப்படியே தொடர்வது உறுதியாகியுள்ளது.

அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே! – சோகத்தில் ஸ்டாலின்

இந்த இரு தேர்தல்களையும் திமுக பெரிதாக நம்பி இருந்தது. இடைத்தேர்தல் 90 சதவீத தொகுதிகளை திமுகவே பிடிக்கும் என ஸ்டாலின் கருதினார். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர அவர் திட்டமிட்டிருந்தார். அதோடு, திமுகவுக்கு சாதகமாக வாக்களிப்போம் என தங்க தமிழ்ச்செல்வனும் கூறியிருந்ததால் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமமுக ஒரு இடத்தில் கூட முன்னணியில் கூட வரவில்லை.

மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என ஸ்டாலின் ஆணித்தரமாக நம்பினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என அவர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால், தேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.

அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே! – சோகத்தில் ஸ்டாலின்

எனவே, பாராளுமன்ற தேர்தலில் 36 இடங்களில் முன்னிலையில் இருந்தும் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் 2 இடங்களை பெற்றாலும், சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் முன்னிலையில் இருப்பதன் மூலம் தனது ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் அதிமுக வெற்றி பெற்றதாகவே பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News