×

ஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….

Ambur constituency – ஆம்பூரில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதேபோல், பல தொகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் எழுந்து வருகிறது. ஆம்பூரில் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடியை சிலர்
 
ஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….

Ambur constituency – ஆம்பூரில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

அதேபோல், பல தொகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் எழுந்து வருகிறது. ஆம்பூரில் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். அவர் அதிமுகவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது.

எனவே, போலீசார் தடியடி கூட்டத்தை கலைத்தனர். அப்போது 2 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் போலீசார் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News