×

சி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை !

சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அமைச்சரின் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் வீட்டில் வளர்ந்து வந்த தங்கை மகன்(வளர்ப்பு மகன்) லோகேஷ் என்பவர் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வேலைப் பார்த்து வந்த இவர் 6 மாதங்களுக்கு முன்னர்தான் தமிழகம் வந்துள்ளார். நேற்று காலை உணவை முடித்துவிட்டு மேலே தன் அறைக்கு சென்றவர் கீழே வராததால் சந்தேமடைந்து மேலே
 
சி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை !

சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அமைச்சரின் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் வீட்டில் வளர்ந்து வந்த தங்கை மகன்(வளர்ப்பு மகன்) லோகேஷ் என்பவர் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வேலைப் பார்த்து வந்த இவர் 6 மாதங்களுக்கு முன்னர்தான் தமிழகம் வந்துள்ளார். நேற்று காலை உணவை முடித்துவிட்டு மேலே தன் அறைக்கு சென்றவர் கீழே வராததால் சந்தேமடைந்து மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

லோகேஷின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பிரேதப் பர்சோதனை முடிந்தபின்னர் அமைச்சரின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சி வி சண்முகத்தின் அண்ணன் சி வி ராஜேந்திரனின் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அவர்கள் குடும்பத்தில் நடந்துள்ள இன்னொரு துர்சம்பவம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News