×

கலைஞர் கருணாநிதி காலமானார்: உதய சூரியன் மறைந்தது!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உயிர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 80 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். 50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்துள்ள அவர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். அவரது இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பேரிழப்பு. இதனையடுத்து இந்தியா முழுமைக்கும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள், முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள்,
 
கலைஞர் கருணாநிதி காலமானார்: உதய சூரியன் மறைந்தது!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உயிர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி 80 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். 50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்துள்ள அவர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். அவரது இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பேரிழப்பு. இதனையடுத்து இந்தியா முழுமைக்கும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள், முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் வருகை தந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர் என்ற சிறப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் அனைத்து பகுதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைது அரசு நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவம், அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News