×

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி

Ban for Arumugasamy commission – ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதன்பின் இதுவரை 151 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், ஜெ.
 
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி

Ban for Arumugasamy commission – ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அதன்பின் இதுவரை 151 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், ஜெ. விற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்னும் விசாரணை முடியாததால் இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், போதிய தகவல்களை அளித்த போதிலும் மீண்டும் மீண்டும் மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டிய அப்போலோ நிர்வாகம், சிகிச்சை அளித்தவர்கள், மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிக்க 21 பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைக்க அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமறம் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆனையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது. மேலும், அப்போலோவின் கோரிக்கைக்கு தமிழிக அரசு பதில் அளிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News