×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு பாஜக ஆதரவு !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. அதனால் திமுக கூட்டணி, நாம்தமிழர் மற்றும் அதிமுகவுக்கு இடையில்தான் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு பாஜக ஆதரவு !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. அதனால் திமுக கூட்டணி, நாம்தமிழர் மற்றும் அதிமுகவுக்கு இடையில்தான் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த போதும் பாஜக மட்டும் எந்த  நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக அமைச்சர்கள் சிலர் பொன் ராதாகிருஷ்ணனை சென்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் ‘இரு கட்சிகளிடையே எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News