×

விஜயகாந்தை அவமானப்படுத்திய பாஜக – தொண்டர்கள் வருத்தம் !

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைக்காதது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பல தேசிய தலைவர்கள் ,
 
விஜயகாந்தை அவமானப்படுத்திய பாஜக – தொண்டர்கள் வருத்தம் !

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைக்காதது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பல தேசிய தலைவர்கள் , சர்வதேசத் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள்  கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக அரசுக்கும் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கும் முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பாஜக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வுக்கு அழைப்பு விடுக்காதது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News