×

அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – திமுகவினர் பதட்டம் !

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்து நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் தலைமை அலுவலகமும் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகமும் அமைந்துள்ள தேனாம்பேட்ட அண்ணா அறிவாலயத்துக்கு நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில் அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்தியில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு சோதனை செய்தபோது அப்படி எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை எனக்
 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்து நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தலைமை அலுவலகமும் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகமும் அமைந்துள்ள தேனாம்பேட்ட அண்ணா அறிவாலயத்துக்கு நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில் அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்தியில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு சோதனை செய்தபோது அப்படி எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் மத்தியில் சிறிதுநேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

From around the web

Trending Videos

Tamilnadu News