×

தீவை விலைக்கு வாங்கி அதை தனி நாடாக்க முயற்சி – நித்யானந்தாவின் பலே திட்டம் !

பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதை தனிநாடாக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்துவதாக நித்யானந்தாவின் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது இப்போது வரைத் தெரியவில்லை. இந்நிலையில் அவர் கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதைத் கைலாசா என்ற தனிநாடாக அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதை இந்துமதத்தின்
 
தீவை விலைக்கு வாங்கி அதை தனி நாடாக்க முயற்சி – நித்யானந்தாவின் பலே திட்டம் !

பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதை தனிநாடாக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்துவதாக நித்யானந்தாவின் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது இப்போது வரைத் தெரியவில்லை. இந்நிலையில் அவர் கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதைத் கைலாசா என்ற தனிநாடாக அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதை இந்துமதத்தின் தலைநகராக (வாட்டிகன் போல) அறிவித்து தன்னையும் இந்துமதத்தின் தலைவராக அறிவித்துக் கொள்ள இருக்கிறாராம் நித்யானந்தா. இதற்கான சட்டரீதியான வேலைகள் நடந்த் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இது சம்மந்தமாக இணையதளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தன் நாட்டுக்காக இரு வண்ணத்திலான பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News