×

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

அரசியலில் ரஜினி, கமல் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவர்கள் கூட்டணி பற்றி அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலாய்த்துள்ளார். அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்நிலையில், மக்களின் நன்மை கருதி
 
காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

அரசியலில் ரஜினி, கமல் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவர்கள் கூட்டணி பற்றி அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலாய்த்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்நிலையில், மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த விவாகரம் தமிழ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு ‘படத்தில் மட்டும்தான் கமலும், ரஜினியும் கதாநாயகன்கள். கட்சியே ஆரபிக்காத ரஜினி விரைவில் வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக இப்படி வாய்ஸ் கொடுத்து வருகிறார். வயதான காலத்தில் கமல், ரஜினி அரசியலுக்காக ஒன்றிணைவது காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது என்று சொல்வார்களே அதுபோன்றதுதான்’ என கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News