×

யாரும் இல்லாத போது சண்டைக்கு அழைப்பது வீரம் இல்லை – ரஜினியை தாக்கிய சீமான் !

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை ரஜினி சந்தித்து பேசியதில் இருந்து அது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் கருத்துக்குப் பதிலளித்த முதல்வர் ‘வயதானதால் படங்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.’ எனக் கூறினார். இதையடுத்து இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் தான் ஒரு மாற்றாக வருவேன் என
 
யாரும் இல்லாத போது சண்டைக்கு அழைப்பது வீரம் இல்லை – ரஜினியை தாக்கிய சீமான் !

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை ரஜினி சந்தித்து பேசியதில் இருந்து அது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் கருத்துக்குப் பதிலளித்த முதல்வர் ‘வயதானதால் படங்கள்  இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.’ எனக் கூறினார். இதையடுத்து இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் தான் ஒரு மாற்றாக வருவேன் என விஜயகாந்த் சொன்னார். அதற்குத் துணிவு வேண்டும். நாம் தமிழர் கட்சி, இரு ஆளுமைகளும் இருக்கும்போதே எதிர்த்து அரசியல் செய்தது. இப்போது யாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமா? வெற்றிடம் இல்லையென்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News