×

கேப்டன் இஸ் பேக் – பிரச்சாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த்

Vijayakanth – தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய விஜயகாந்த் அதன்பின் தொண்டர்களிடம் பேசவில்லை. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனது வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்திற்கு வருவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவியது. விஜயகாந்த் கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு வருவார் என பிரேமலதா தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், இன்றும், நாளையும் விஜயகாந்த் சென்னையில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என நேற்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த செய்தி தேமுதிக
 
கேப்டன் இஸ் பேக் – பிரச்சாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த்

Vijayakanth – தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய விஜயகாந்த் அதன்பின் தொண்டர்களிடம் பேசவில்லை. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனது வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்திற்கு வருவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவியது. விஜயகாந்த் கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு வருவார் என பிரேமலதா தொடர்ந்து கூறிவந்தார்.

இந்நிலையில், இன்றும், நாளையும் விஜயகாந்த் சென்னையில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என நேற்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த செய்தி தேமுதிக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News