×

பாலிமர் டி வி ரிப்போர்ட்டருக்கு அரிவாள் வெட்டு – இன்ஸ்பெக்டர் செய்த அக்கிரமம் !

தூத்துக்குடி சாத்தான் குளம் இன்ஸ்பெக்டரின் கந்துவட்டி லீலைகளை அம்பலப்படுத்திய பாலிமர் டிவி ரிப்போர்ட்டர் கூலிப்படைக் கொண்டு தாக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியின் பாலிமர் டிவி செய்தியாளர் முத்துவேல். இவர் கடந்த வாரம் சாத்தான் குளம் பகுதியின் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்பவரைப் பற்றிய செய்தி ஒன்றை சேகரித்து பாலிமர் டிவியில் ஒளிப்பரப்பினார். அதில் இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு கஜேந்திரன் பொதுமக்களுக்குக் கந்துவட்டியில் பணம் கொடுப்பதாகவும் பணத்தை திருப்பி செலுத்த முடியாதவர்களை போலிஸ் ஸ்டேஷனில் வைத்து
 
பாலிமர் டி வி ரிப்போர்ட்டருக்கு அரிவாள் வெட்டு – இன்ஸ்பெக்டர் செய்த அக்கிரமம் !

தூத்துக்குடி சாத்தான் குளம் இன்ஸ்பெக்டரின் கந்துவட்டி லீலைகளை அம்பலப்படுத்திய பாலிமர் டிவி ரிப்போர்ட்டர் கூலிப்படைக் கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியின் பாலிமர் டிவி செய்தியாளர் முத்துவேல். இவர் கடந்த வாரம் சாத்தான் குளம் பகுதியின் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்பவரைப் பற்றிய செய்தி ஒன்றை சேகரித்து பாலிமர் டிவியில் ஒளிப்பரப்பினார். அதில் இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு கஜேந்திரன் பொதுமக்களுக்குக் கந்துவட்டியில் பணம் கொடுப்பதாகவும் பணத்தை திருப்பி செலுத்த முடியாதவர்களை போலிஸ் ஸ்டேஷனில் வைத்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்புறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் கஜேந்திரன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன் நேற்று இரவு 9 மணிக்கு  சண்முகநாதன் எனும் கூலிப்படை அடியாளை அனுப்பி முத்துவேலை அரிவாளால் தாக்கியுள்ளார். படுகாயங்களோடு தப்பிய முத்துவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News