×

தீர்ப்புக்கு முன்னர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் உருக்கமாக பேசிய தினகரன்!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் தீர்ப்பு தீர்வை எட்டாமல் மூன்றாவது நீதிபதி விசாரணையை நோக்கி சென்றுள்ளது. தீர்ப்பு வெளியாகும் முன்னர் எடப்பாடி, தினகரன் என இரு தரப்பினருமே தீவிர ஆலோசனையில் இருந்தனர். ஒருவேளை எம்எல்ஏக்களை நீக்கியது செல்லாது என தீர்ப்பு வந்தால், 18 எம்எல்ஏக்களும் எடப்பாடி அணியுடன் போய் சேர்ந்துவிடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
 
தீர்ப்புக்கு முன்னர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் உருக்கமாக பேசிய தினகரன்!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் தீர்ப்பு தீர்வை எட்டாமல் மூன்றாவது நீதிபதி விசாரணையை நோக்கி சென்றுள்ளது.

தீர்ப்பு வெளியாகும் முன்னர் எடப்பாடி, தினகரன் என இரு தரப்பினருமே தீவிர ஆலோசனையில் இருந்தனர். ஒருவேளை எம்எல்ஏக்களை நீக்கியது செல்லாது என தீர்ப்பு வந்தால், 18 எம்எல்ஏக்களும் எடப்பாடி அணியுடன் போய் சேர்ந்துவிடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தீர்ப்பு வரும் முன்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு எம்எல்ஏக்களும் வரிசையாக தினகரன் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய டிடிவி தினகரன், எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வரும். அதனால் நீங்க யாரும் கவலைப்படாமல் தைரியமாக இருங்க.

உங்களுக்கு என்ன விலை கொடுக்கவும் எடப்பாடி ரெடியாக இருப்பாரு. தயவு செய்து அந்த தப்பை யாரும் பண்ணிடாதீங்க. இவ்வளவு நாள் நாம எல்லோரும் பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போயிடும். நீங்கதான் என்னோட சொத்து. உங்களை நம்பித்தான் நான் இருக்கேன் என உருக்கமாக கூறியிருக்கிறார். அதன் பின்னர் பேசிய தங்க தமிழ்ச்செல்வனும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News