×

திமுகவும் அதிமுகவும் மறைமுகக் கூட்டணி: சொல்வது பாஜக!

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாக பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சட் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்டாலினுக்கு பூசப்பட்ட திருநீறை அவர் உடனே அளித்தது குறித்து விமர்சித்தார். ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்ட மாலை ஸ்டாலினுக்குக் கொண்டுவந்து போடப்பட்டது, ரங்கநாயகிக்கு சாத்தப்பட்ட திருமஞ்சன மஞ்சளை ஸ்டாலினுக்கு அணிவித்துள்ளனர். ஆனால், அதை உடனே துடைத்துத்
 
திமுகவும் அதிமுகவும் மறைமுகக் கூட்டணி: சொல்வது பாஜக!

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாக பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சட் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்டாலினுக்கு பூசப்பட்ட திருநீறை அவர் உடனே அளித்தது குறித்து விமர்சித்தார். ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்ட மாலை ஸ்டாலினுக்குக் கொண்டுவந்து போடப்பட்டது, ரங்கநாயகிக்கு சாத்தப்பட்ட திருமஞ்சன மஞ்சளை ஸ்டாலினுக்கு அணிவித்துள்ளனர்.

ஆனால், அதை உடனே துடைத்துத் தனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஸ்டாலினை அங்கிருந்த பட்டர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஸ்டாலின் மீது அறநிலையத் துறை இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மறைமுகமாக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அதனால்தான் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நபர்கள் எந்த வழிபாட்டுத் தளங்களுக்கும் நுழைய அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

From around the web

Trending Videos

Tamilnadu News