×

வேலூரை கைப்பற்றிய திமுக – கதிர் ஆனந்த் வெற்றி

Velur Election 2019 – நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
 
வேலூரை கைப்பற்றிய திமுக – கதிர் ஆனந்த் வெற்றி

Velur Election 2019 – நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

வேலூரை கைப்பற்றிய திமுக – கதிர் ஆனந்த் வெற்றி

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்நிலையில், இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடர் முன்னிலை வகித்து வந்தார். கதிர் ஆனந்தை விட ஏ.சி.சண்முகம் 15 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வந்தார். அதன்பின், திடீர் திருப்பமாக கதிர் ஆனந்த் 12 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். அதன் பின் தொடர்ந்து கதிர் ஆனந்தே முன்னிலை பெற்று வந்தார்.

வேலூரை கைப்பற்றிய திமுக – கதிர் ஆனந்த் வெற்றி

கடைசியாக வெளியான தகவல் படி கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்படி, 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலயில் இருந்தார்.

தற்போது வேலூர் மக்களவை தொகுதியில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு வித்தியாசம் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. எனவே, திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். எனவே, திமுக மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News