×

தேமுதிகவை பழிவாங்கிய திமுக – பின்னணி என்ன?

Durai Murugan : தேமுதிகவிற்கும், திமுகவுக்கும் தொடங்கியுள்ள வார்த்தை போர் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது “தேமுதிக கூட்டணியில்
 
தேமுதிகவை பழிவாங்கிய திமுக – பின்னணி என்ன?

Durai Murugan : தேமுதிகவிற்கும், திமுகவுக்கும் தொடங்கியுள்ள வார்த்தை போர் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது “தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். ஆனால், உள்ளே செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் இல்லை. வெளியே வரும் போது உள்ளனர். இதை, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரண விஷயத்தை சூழ்ச்சி செய்து இதை பூதாகரமாக்கி விட்டது” என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தேமுதிகவை பழிவாங்கிய திமுக – பின்னணி என்ன?

விஜயகாந்தை சந்திக்க ஸ்டாலின் அவரின் வீட்டிற்கே சென்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் நாங்கள் அரசியல் பேசவில்லை என மறுத்தார். ஆனால், பிரேமலதாவோ ‘இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது அரசியல் பேசுவது சகஜம்’ என போட்டு உடைத்தார். இது, கூட்டணி பேச விஜயகாந்தை தேடி ஸ்டாலின் வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இது ஸ்டாலின் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை மனதில் வைத்தே பழிவாங்கும் விதமாக, துரைமுருகன் தன்னிடம் செல்போனில் சுதீஷ் பேசியதையும், தேமுதிக நிர்வாகிகள் கூட்டணிக்காக வந்து பேசியதையும் செய்தியாளர்கள் முன் போட்டு உடைத்தார் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

துரைமுருகன் பழுத்த அரசியல்வாதி. இந்த விளையாட்டெல்லாம் துரைமுருகனுக்கு சாதாரணம். துரைமுருகனின் பேட்டி மூலம் ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியாகிவிட்டது. இது அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. இது அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் ஆப்பு வைத்து விட்டது. திமுக ஏற்கனவே கூட்டணி கதவை சாத்தி விட்டது. அதிமுகவும் அந்த முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அல்லது பாஜகவின் நெருக்கடி காரணமாக வெறும் 2 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிகவை பழிவாங்கிய திமுக – பின்னணி என்ன?

தேமுதிகவுக்கு இருப்பது தற்போது 2 வாய்ப்புகள்தான் இருக்கிறது. அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும். இரண்டுமே தேமுதிகவின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அல்லது, தினகரனுடனோ, மக்கள் நீதி மய்யத்துடனோ கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். இதில் எந்த முடிவை தேமுதிக எடுக்கும் எனத் தெரியவில்லை.

நேரம் பார்த்து தேமுதிகவை திமுக காலி செய்து விட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News