×

தங்கத்தை தூக்க வேண்டாம். அவரே போய்டுவார் – தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்

TTV Dinakaran – அமமுக கட்சியின் பொறுப்புகளிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டதன் மூலம் விரைவில் அவர் அந்த கட்சியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமையான டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய ஆடியோ நேற்று வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் ஆலோசனை செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியாக செயல்பட்டால் அமமுக
 
தங்கத்தை தூக்க வேண்டாம். அவரே போய்டுவார் – தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்

TTV Dinakaran – அமமுக கட்சியின் பொறுப்புகளிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டதன் மூலம் விரைவில் அவர் அந்த கட்சியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமையான டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய ஆடியோ நேற்று வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தை தூக்க வேண்டாம். அவரே போய்டுவார் – தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்

இதுபற்றி தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் ஆலோசனை செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியாக செயல்பட்டால் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் உட்பட பல பதவிகளிலிருந்து உங்களை நீக்கி விடுவேன் என அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தேன்.. அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார் என கூறி சென்றார்.

தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசனை செய்த போது ‘தங்க தமிழ்ச்செல்வனை நீக்கினால் அவரை நாமே பெரிய ஆளாக ஆக்கி விட்டது போல் ஆகிவிடும். நமக்கு எதிராக ஊடகங்களில் பேட்டி கொடுப்பார். தரக்குறைவாக விமர்சனம் செய்தார். எனவே, பொறுப்புகளிலிருந்து அவரை நீக்கி விடுங்கள். அவரே கட்சியை விட்டு சென்றுவிடுவார்’ எனக் கூறியுள்ளனர். அதன் பின்னரே செய்தியாளர்களிடம் அப்படி தினகரன் பேட்டி கொடுத்துள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News