×

கொள்கை இல்லை என உனக்கு தெரியுமா? – அடுத்த விஜயகாந்தான பிரேமலதா

Premalatha Vijayakanth : தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அவர்களை ஒருமையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம்
 
கொள்கை இல்லை என உனக்கு தெரியுமா? – அடுத்த விஜயகாந்தான பிரேமலதா

Premalatha Vijayakanth : தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அவர்களை ஒருமையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது “தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். ஆனால், உள்ளே செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் இல்லை. வெளியே வரும் போது உள்ளனர். இதை, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரண விஷயத்தை சூழ்ச்சி செய்து இதை பூதாகரமாக்கி விட்டது” என தெரிவித்தார்.

அப்போது, பத்திரிக்கையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு உனக்கு தெரியுமா? நீ அமைதியாக இரு… தேமுதிக கொள்கை பற்றி உனக்கு என்ன தெரியும்? என பல கேள்விகளுக்கு செய்தியாளர்களை அவர் ஒருமையிலேயே அழைத்தார். இதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சற்று நேரம் பதட்டம் ஏற்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News