×

மனைவி சடலத்துடன் மருத்துவர் போராட்டம் – உயிர் கொள்ளும் டாஸ்மாக்  !

கோவை மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் குடிகாரர்களால் விபத்து ஏற்பட்டு இறந்த தன் மனைவியின் உடலோடு 5 மணிநேரம் நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் மருத்துவர். கோவை மாவட்டம் ஆனைக்கட்டிப் ப்கௌதியில் மிகவும் பிரபலமான மருத்துவர் ரமேஷ். இவர் அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவத்தை ஒரு சேவையாக செய்து வாழ்ந்து வருபவர். நேற்று இவரது மனைவி மற்றும் மகள் சகுந்தலா பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வரும் போது அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் குடித்துவிட்டு போதையில் வந்த நபர்களின்
 
மனைவி சடலத்துடன் மருத்துவர் போராட்டம் – உயிர் கொள்ளும் டாஸ்மாக்  !

கோவை மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் குடிகாரர்களால் விபத்து ஏற்பட்டு இறந்த தன் மனைவியின் உடலோடு 5 மணிநேரம் நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் மருத்துவர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டிப் ப்கௌதியில் மிகவும் பிரபலமான மருத்துவர் ரமேஷ். இவர் அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவத்தை ஒரு சேவையாக செய்து வாழ்ந்து வருபவர். நேற்று இவரது மனைவி மற்றும் மகள் சகுந்தலா பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வரும் போது அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் குடித்துவிட்டு போதையில் வந்த நபர்களின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவி அதே இடத்தில் மரணமடைந்துள்ளார். மகள் சகுந்தலா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர் ரமேஷ், தன் மகளைக் கூட பார்க்க செல்லாமல் மனைவியின் சடலத்தோடு அந்த இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூட சொல்லி போராட்டம் நடத்தினார். அவரோடு சேர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடவே அந்த இடம் பரபரப்புக்குள்ளானது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டார் ரமேஷ்.

தரம்ல்லாத மது வகைகளை கொடுத்து மக்களைப் போதைக்கு அடிமையாக்கி இப்படி இன்னும் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கையில் விளையாடப் போகிறதோ அரசு ?

From around the web

Trending Videos

Tamilnadu News