×

நம்ம கூட்டணியில் விஜயகாந்த் வேண்டாம் – ராமதாஸ் போர்க்கொடி?

Dr. Ramadas : அதிமுக – பாஜக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக தரப்பிடம் கூறியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதுஒரு புறம் இருக்க, அதிமுக
 
நம்ம கூட்டணியில் விஜயகாந்த் வேண்டாம் – ராமதாஸ் போர்க்கொடி?

Dr. Ramadas : அதிமுக – பாஜக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக தரப்பிடம் கூறியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

நம்ம கூட்டணியில் விஜயகாந்த் வேண்டாம் – ராமதாஸ் போர்க்கொடி?

இதுஒரு புறம் இருக்க, அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் வேண்டாம் என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளாராம். தேமுதிக தொண்டர்களுக்கும், பாமக கட்சியினருக்கும் இடையே ஒத்துவராது. இப்போது, அவருடன் கூட்டணி அமைத்தால், பாமக போட்டியிடும் தொகுதிகளில் தேமுதிகவினர் வேலை செய்ய மாட்டார்கள். அதேபோல், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பாமகவினர் வேலை செய்ய மாட்டார்கள். எனவே, அனைவருக்கும் இது இழப்புதான். இறுதியில் தோல்வியே மிஞ்சும். எனவே, விஜயகாந்த் வேண்டாம் என ராமதாஸ் கூறியுள்ளதாக தெரிகிறது. அதோடு, தேமுதிகவிற்கு தற்போது 2 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கிறது என பாமகவினர் எடுத்த சர்வே பற்றியும் அதிமுக தரப்பிடம் ராமதாஸ் கூறியிருக்கிறாராம்.

எனவே, 4 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா என பேசியதை மாற்றி தற்போது 2 சீட் மட்டுமே தர முடியும் என தேமுதிகவிடம் அதிமுக கறாராக கூறியதாக தகவல் கசிந்துள்ளது. இது, பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும், டெல்லி பாஜக தலைமை மூலம் வேண்டியதை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News