×

லிமிட்டாகக் குடித்தால் ஒடம்புக்கு ஒண்ணும் ஆகாது – அமைச்சர் தங்கமணி பேச்சு !

சட்டமன்றத்தில் நேற்று நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் கடைகளைக் குறைத்தல் மற்றும் மதுவின் தரம்பற்றி சிலக் கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் மட்டுமே முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் முழு மதுவிலக்கு என ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இன்னமும் மதுக்கடைகளை மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் உழைக்கும்
 
லிமிட்டாகக் குடித்தால் ஒடம்புக்கு ஒண்ணும் ஆகாது – அமைச்சர் தங்கமணி பேச்சு !

சட்டமன்றத்தில் நேற்று நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் கடைகளைக் குறைத்தல் மற்றும் மதுவின் தரம்பற்றி சிலக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் மட்டுமே முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் முழு மதுவிலக்கு என ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இன்னமும் மதுக்கடைகளை மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் உழைக்கும் பொதுமக்கள் குடிக்கு அடிமையாகி தங்கள் வாழ்வையும் தங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தையும் சிதறடிக்கின்றனர். இதற்குக் காரணம் தமிழக டாஸ்மாக்குகளில் வழங்கப்படும் மதுவகைகளின் தரம் மிகக்குறைவாக உள்ளதாகவும் குடிப்பவர்களை அதற்கு அடிமையாக்கும் வண்ணம் உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் கேள்வியெழுப்பினார். அதில் ‘தமிழகத்தில் மதுவின் மிகவும் குறைவாக உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி ‘ குடிப்பவர்கள் அதிகமாகக் குடித்தால் உடல்நலம் கெடத்தான் செய்யும். அளவாகக் குடித்தால் ஒன்றும் ஆகாது. டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாகும் என்பதால் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. 6,132 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5,152 கடைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது’ எனப் பதிலளித்தார். அமைச்சரின் பேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரே கமெண்ட் அடித்து கேலி செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News