×

துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை – தொடரும் பதட்டம்

Durai Murugan : திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துரைமுருகனிடம் கூட்டணி பற்றி பேசவில்லை என மறுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த துரைமுருகன், தேமுதிகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என மேலும் கலாய்த்தார். இது
 
துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை – தொடரும் பதட்டம்

Durai Murugan : திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துரைமுருகனிடம் கூட்டணி பற்றி பேசவில்லை என மறுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த துரைமுருகன், தேமுதிகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என மேலும் கலாய்த்தார்.

இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை – தொடரும் பதட்டம்இதனால் கோபமடந்த தேமுதிக நிர்வாகிகள் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட்டனர். கையில் கருப்பு கொடியும், தேமுதிக கொடியும் வைத்திருந்த அவர்கள் துரைமுருகனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதற்கு அனுமதி மறுத்த அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதில் கோபமடைந்த நிர்வாகிகள் காட்பாடி – சித்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, 50க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

துரைமுருகன் கொடுத்த பேட்டியின் மூலம் திமுக – தேமுதிக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News