×

பிரச்சாரத்தில் பணம் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி – அதிர்ச்சி வீடியோ

Edappadi palanisamy – தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வருகிற 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்துக்கு கடைசி நாள் என்பதால், அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று தீவிரமாக ஈடுபட்டன. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி இன்று சேலத்தில் நடந்த படியே மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பழக்கடை நடத்தி வரும் ஒரு மூதாட்டியிடம் வாக்கு சேகரித்த அவர், அவரது கையில்
 
பிரச்சாரத்தில் பணம் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி – அதிர்ச்சி வீடியோ

Edappadi palanisamy – தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வருகிற 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்துக்கு கடைசி நாள் என்பதால், அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று தீவிரமாக ஈடுபட்டன.

இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி இன்று சேலத்தில் நடந்த படியே மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பழக்கடை நடத்தி வரும் ஒரு மூதாட்டியிடம் வாக்கு சேகரித்த அவர், அவரது கையில் பணத்தை திணிக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த அம்மாவிடம் பணம் வாங்கினேன். அதற்குதான் பணம் கொடுத்தேன். பழம் வாங்கியதை காட்டாமல், பணம் கொடுத்த காட்சியை மட்டும் காட்டியுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News