×

வேலூர் தொகுதியில் தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Velur constituency – வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில் வேலூரில் உள்ள துரைமுருகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சில இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அவை, வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என செய்திகள் வெளியானது. சோதனை பற்றி
 
வேலூர் தொகுதியில் தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Velur constituency – வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

சமீபத்தில் வேலூரில் உள்ள துரைமுருகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சில இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அவை, வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என செய்திகள் வெளியானது.

வேலூர் தொகுதியில் தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சோதனை பற்றி வருமான வரித்துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். அதைபின்பற்றி, தேர்தலை ரத்து செய்யலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறிக்கை அனுப்பியது. இதைத்தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு பின், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாக்களர்களுக்கு பணம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால், தேர்தலை நிறுத்தக்கூடாது. இதில், தலையிட ஜனாதிபதிக்கு எந்த தேவையும் இல்லை என்பது பல்வேறு கோரிக்கைகளை வைத்து வாதாடப்படது.

இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தற்போது உத்தரவிட்டுள்ளது. எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News