×

விக்கிரவாண்டியில் தேர்தல் விதிமீறல் – அதிமுக மீது திமுக புகார் !

விக்கிரவாண்டித் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிகளை மீறி போஸ்டர் அடித்துள்ளதாக திமுகவினர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தியும் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செலவ்னும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளுக்காக இரு கட்சிகளும் தேர்தல் குழுக்களை அமைத்து தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலில்
 
விக்கிரவாண்டியில் தேர்தல் விதிமீறல் – அதிமுக மீது திமுக புகார் !

விக்கிரவாண்டித் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிகளை மீறி போஸ்டர் அடித்துள்ளதாக திமுகவினர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக புகழேந்தியும் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செலவ்னும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளுக்காக இரு கட்சிகளும் தேர்தல் குழுக்களை அமைத்து தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள விக்கிரவாண்டித் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிகளை மீறி விக்கிரவாண்டியில் நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துப் போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதாகவும் உடனடியாக அந்த போஸ்டர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மேலும் தேர்தல் முடியும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News