×

புதுச்சேரியிலும் காலியாகும் அமமுக கூடாரம் – நிர்வாகிகள் ராஜினாமா !

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக வேல்முருகன் மீண்டும் நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலின் போதே இவருக்கும் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அவர் மீது கட்சி நிர்வாகிகள் அனைவரும் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது கட்சித் தலைமை. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா
 
புதுச்சேரியிலும் காலியாகும் அமமுக கூடாரம் – நிர்வாகிகள் ராஜினாமா !

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக வேல்முருகன் மீண்டும் நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலின் போதே இவருக்கும் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அவர் மீது கட்சி நிர்வாகிகள் அனைவரும் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது கட்சித் தலைமை.

இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதற்கானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அக்கடிதத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் அதலபாதாளத்தில் கிடக்கும் அமமுக இப்போது புதுச்சேரியிலும் தனது செல்வாக்கை இழந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News