×

என்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் !

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் எடப்பாடி ஆட்சியை மட்டம் தட்ட ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்துகொண்டு வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நேற்றுப் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசினார். அவரது பேச்சில் ‘இப்ப நடப்பது அதிமுக ஆட்சியே இல்லை. இது எடப்பாடி ஆட்சி. எடப்பாடி ஆட்சினு கூட சொல்ல முடியாது, பாஜக எடுபிடி
 
என்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் !

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் எடப்பாடி ஆட்சியை மட்டம் தட்ட ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்துகொண்டு வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நேற்றுப் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசினார்.

அவரது பேச்சில் ‘இப்ப நடப்பது அதிமுக ஆட்சியே இல்லை. இது எடப்பாடி ஆட்சி. எடப்பாடி ஆட்சினு கூட சொல்ல முடியாது, பாஜக எடுபிடி ஆட்சி. அதிமுக ஆட்சின்னா அது எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தது. பின்னர் ஜெயலலிதா நடத்தியது. என்னதான் ஜெயலலிதா ஊழல் செஞ்சாலும், சர்வாதிகாரியா இருந்தாலும், தமிழ்நாட்டு கௌரவத்தை மத்திய அரசுக்கிட்ட விட்டுக் கொடுத்ததில்ல. ஆனா இப்போ நம்ம சுதந்திரம் நம்ம விட்டுப் போயிட்டிருக்கு.

ஆனா நம்ம ஊர் தபால் ஆபீஸ்ல ரயில்கள்ல, பேங்க் செக்குல இந்திதான் இருக்கணும்னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும். ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்யப் போறாருனு கேட்கிறாங்க. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நாங்கள் என்ன செய்வோம்னு காட்டுகிறோம்.’ எனப் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News