×

எல்லாம் போச்சு! கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா

Premalatha : பிரேமலதா செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்த விதமும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம்
 
எல்லாம் போச்சு! கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா

Premalatha : பிரேமலதா செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்த விதமும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது “தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். ஆனால், உள்ளே செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் இல்லை. வெளியே வரும் போது உள்ளனர். இதை, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரண விஷயத்தை சூழ்ச்சி செய்து இதை பூதாகரமாக்கி விட்டது” என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

எல்லாம் போச்சு! கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா

மேலும், அவர் அதிமுகவையும் விட்டு வைக்கவில்லை. 39 எம்.பிக்கள் இருந்து என்ன பயன்? மக்களுக்கு எந்த நன்மையுயும் நடக்கவில்லை. 2011ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றதற்கே தேமுதிகதான் காரணம் என பொரிந்து தள்ளினார்.

பாஜகவின் நெருக்கடி காரணமாகவே, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு, பிரேமலதாவின் பேச்சு கடும் கோபத்தையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளதாம். எனவே, தேமுதிக வேண்டாம் என்கிற மனநிலைக்கும் அதிமுக வந்து விட்டதாக தெரிகிறது. தேமுதிகவிற்கு எதிரான கருத்துகளை அதிமுக அமைச்சர்கள் பேட்டிகளில் கூறத்தொடங்கி விட்டனர்.

ஏற்கனவே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ‘விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறியவர்கள் இப்போது ஏன் கூட்டணிக்காக வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். பன்றி கூட்டமாக வரும். சிங்கம் தனியாகத்தான் வரும்’ எனப் பேசி அதிமுக தரப்பின் கண்டனத்துக்கு ஆளானார். தற்போது பிரேமலதாவும் அதே போல் பேசியுள்ளார். திமுக ஏற்கனவே கூட்டணி கதவை சாத்தி விட்டது. அதிமுகவும் அந்த முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அல்லது பாஜகவின் நெருக்கடி காரணமாக வெறும் 2 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் போச்சு! கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா

அதை ஏற்க மறுத்து தினகரன் தேமுதிக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தொகுதி செலவுக்கு தினகரனிடம் பணம் பெற முடியாது. தனித்துப் போட்டியிட்டாலும் வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ள தேமுதிக அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.

உடல்நிலை காரணமாக விஜயகாந்த் செயல்படாத நிலையில் இருக்கும் போது, பிரேமலதாவின் ஆணவமான பேட்டி தேமுதிகவின் அரசியல் எதிர்காலைத்தை காலி செய்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News