×

தண்ணீர் பஞ்சத்தால் சாப்பாடு இலவசம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல் !

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தொழிலில் ஹோட்டல் தொழிலும் ஒன்றாக உள்ளது. தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாகத் தண்ணீருக்காக தவம் இருக்கிறது. வழக்கமாக கிராமத்தைத் தாக்கும் தண்ணீர் பஞ்சம் இந்த முறைக் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் இரண்டு முறை ஆட்சியில் இருந்தும் அதிமுக அரசு எந்த ஒரு முறையானத் திட்டத்தையும் மேற்கொள்ளாததுதான் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சென்னை உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள்
 
தண்ணீர் பஞ்சத்தால் சாப்பாடு இலவசம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல் !

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தொழிலில் ஹோட்டல் தொழிலும் ஒன்றாக உள்ளது.

தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாகத் தண்ணீருக்காக தவம் இருக்கிறது. வழக்கமாக கிராமத்தைத் தாக்கும் தண்ணீர் பஞ்சம் இந்த முறைக் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் இரண்டு முறை ஆட்சியில் இருந்தும் அதிமுக அரசு எந்த ஒரு முறையானத் திட்டத்தையும் மேற்கொள்ளாததுதான் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

தண்ணீர்ப் பற்றாக்குறையால் சென்னை உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள் தண்ணீர் இல்லாதால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கூறிவிட்டது. மேலும் சில ஹோட்டல்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூட விருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதேப் போல சில ஹோட்டல்களில் டாய்லட்களையும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மூடி வைத்த அவலமும் நடந்தது. ஆனால் அமைச்சர் வேலுமணியோ தமிழகத்துக்கு நவம்பர் மாதம் வரையில் போதுமானத் தண்ணீர் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கேலி செய்யும் விதமாக ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ‘அளவுத் தண்ணீர் ரூ 150 மற்றும் அளவில்லாத் தண்ணீர் 200 ரூ .. சாப்பாடு இலவசம்’ என அறிவித்துள்ளது. இதற்கு அமைச்சர் வேலுமணி என்ன பதில் சொல்லுவாரோ எனத் தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News