×

தொலைபேசியில் மிரட்டல் – காவல் நிலையத்தில் காயத்ரி ரகுராம் !

பிரபல நடிகை மற்றும் பாஜக உறுப்பினரான காயத்ரி ரகுராம் தனக்கு மிரட்டல்கள் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திரையுலகில் நடிகையாக நடித்தபோது கூட கிடைக்காத புகழ் காயத்ரி ரகுராமுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கிடைத்தது. இதையடுத்து பாஜகவில் இணைந்த அவர் சர்ச்சையானக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசியதற்கு எதிர்வினையாற்றிய காயத்ரி, ட்விட்டரில் அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த
 
தொலைபேசியில் மிரட்டல் – காவல் நிலையத்தில் காயத்ரி ரகுராம் !

பிரபல நடிகை மற்றும் பாஜக உறுப்பினரான காயத்ரி ரகுராம் தனக்கு மிரட்டல்கள் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திரையுலகில் நடிகையாக நடித்தபோது கூட கிடைக்காத புகழ் காயத்ரி ரகுராமுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கிடைத்தது. இதையடுத்து பாஜகவில் இணைந்த அவர் சர்ச்சையானக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசியதற்கு எதிர்வினையாற்றிய காயத்ரி, ட்விட்டரில் அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார்.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் தனக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News