×

டிரெண்டிங்கில் ‘கோ பேக் ராகுல்’ – மோடிக்கு அடுத்து சிக்கிய ராகுல் காந்தி

ராகுல்காந்தி சென்னைக்கு வந்துள்ள நிலையில், கோ பேக் ராகுல் என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ‘கோ பேக் மோடி’ என்கிற ஷேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது, இதிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தப்பவில்லை. மோடியின் திட்டங்கள் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக்கை பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், ராகுல் காந்திக்கு எதிராக இலங்கை இனப்படுகொலையை
 
டிரெண்டிங்கில் ‘கோ பேக் ராகுல்’ – மோடிக்கு அடுத்து சிக்கிய ராகுல் காந்தி

ராகுல்காந்தி சென்னைக்கு வந்துள்ள நிலையில், கோ பேக் ராகுல் என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ‘கோ பேக் மோடி’ என்கிற ஷேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது, இதிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தப்பவில்லை.

மோடியின் திட்டங்கள் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக்கை பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், ராகுல் காந்திக்கு எதிராக இலங்கை இனப்படுகொலையை கையில் எடுத்துள்ளனர். இதில், கோ பேக் மோடி விவகாரத்தில் ஏற்கனவே கோபமடைந்திருக்கும் பாஜகவினர் பலரும் ராகுலுக்கு எதிராக இந்த ஷேஷ்டேக்கை பதிவு செய்ததால் தற்போது #GoBackRahul ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் ராகுலுக்கு எதிரான #GoBackpappu என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இது காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், திமுகவினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News