×

திமுகவிற்கு செல்கிறேனா? – தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலக முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்தி குறித்து தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். தினகரன் அணியிலிருந்து ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றுவிட்ட நிலையில், தினகரனுக்கு வலது கரமாக செயல்படும் தங்க தமிழ்ச்செல்வனும் அணி மாற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவியது. அவரை அதிமுகவிற்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும், ஒரு பக்கம் செந்தில் பாலாஜி அவரை திமுகவிற்கு இழுக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தனது முகநூல் மற்றும் டிவிட்டர்
 
திமுகவிற்கு செல்கிறேனா? – தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலக முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்தி குறித்து தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

தினகரன் அணியிலிருந்து ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றுவிட்ட நிலையில், தினகரனுக்கு வலது கரமாக செயல்படும் தங்க தமிழ்ச்செல்வனும் அணி மாற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவியது. அவரை அதிமுகவிற்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும், ஒரு பக்கம் செந்தில் பாலாஜி அவரை திமுகவிற்கு இழுக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நான் திமுகவில் சேர விருப்பதாக @DMKITwing வதந்தியை பரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம் .

நான் என்றும் தியாக தலைவி #சின்னம்மா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி.

என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News