×

எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசையும், கோர்ட்டையும் எதிர்த்து பேசிய வீடியோதான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பலரும் ஹெச்.ராஜாவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ பதிவு. நீதித்துறையையும், காவல்துறையையும் அவதூறாக பேசியதாக இந்த வீடியோவை வைத்து புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில்
 
எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசையும், கோர்ட்டையும் எதிர்த்து பேசிய வீடியோதான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பலரும் ஹெச்.ராஜாவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்

போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ  பதிவு.   நீதித்துறையையும், காவல்துறையையும் அவதூறாக பேசியதாக இந்த வீடியோவை வைத்து

புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமயம் போலீசார் ராஜா மீது  சட்டவிரோதமாக கூடுதல்,  அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல்,  அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல்,  பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட  8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News