×

ஆளை விடுங்கப்பா.. நான் திமுகவிலேயே இல்லப்பா.. தெறித்து ஓடிய அழகிரி

பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜாவை மு.க.அழகிரி சந்தித்து பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. சமீப காலமாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்தார். நேற்று திடீரென அவர் காரைக்குடியில் இருந்த ஹெச்.ராஜாவை சந்தித்து பேசினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சந்திப்பு முடிந்த பின் வெளியே வந்த அழகிரியிடம் ‘திமுக பொதுக்குழு கூடியுள்ள நிலையிலும், உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையிலும் உங்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக
 
ஆளை விடுங்கப்பா.. நான் திமுகவிலேயே இல்லப்பா.. தெறித்து ஓடிய அழகிரி

பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜாவை மு.க.அழகிரி சந்தித்து பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. சமீப காலமாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்தார். நேற்று திடீரென அவர் காரைக்குடியில் இருந்த ஹெச்.ராஜாவை சந்தித்து பேசினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சந்திப்பு முடிந்த பின் வெளியே வந்த அழகிரியிடம் ‘திமுக பொதுக்குழு கூடியுள்ள நிலையிலும், உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையிலும் உங்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளலாமா?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ‘அட போங்கப்பா! நான் திமுகவிலேயே இல்லப்பா.. ஹெச். ராஜாவின் வீட்டு திருமணத்துக்கு என்னால் செல்ல முடியாது. எனவே முன்பே வாழ்த்து சொல்ல வந்தேன்..அவ்வளவுதான்” எனக்கூறிவிட்டு அங்கிருந்து அழகிரி சென்றுவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News