×

அரசியலில் இருந்து விலகுகிறேன் – நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

Deepa inform to party memers quiting from polytics – தான் அரசியலில் இருந்து விலகுவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரது பேரவை நிர்வாகிகளிடம் கூறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா அரசியல் வெளிச்சம் பெற்றார். ஜெ தீபா பேரவை என்ற அமைப்பையும் உருவாக்கினார். ஆனால் அரசியலில் அவர் பெரிதாக கவனம் ஈர்க்காத சூழ்நிலையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக
 
அரசியலில் இருந்து விலகுகிறேன் – நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

Deepa inform to party memers quiting from polytics  – தான் அரசியலில் இருந்து விலகுவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரது பேரவை நிர்வாகிகளிடம் கூறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா அரசியல் வெளிச்சம் பெற்றார். ஜெ தீபா பேரவை என்ற அமைப்பையும் உருவாக்கினார். ஆனால் அரசியலில் அவர் பெரிதாக கவனம் ஈர்க்காத சூழ்நிலையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அங்கும் அவருக்குப் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லை. இந்த முடிவால் அவரது பேரவையிலும் அவருக்கு எதிரானக் குரல்கள் எழுந்ததாக தெரிகிறது.

அரசியலில் இருந்து விலகுகிறேன் – நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

இது சம்மந்தமாக நிர்வாகி ஒருவரை தீபா பேரவையில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த நிர்வாகிகள் அவரைத் திட்டியுள்ளனர். மேலும் அவரது நம்பரை வாட்ஸ் ஆப் க்ரூப்களில் பகிர்ந்து அவருக்கு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இன்று காலை தனது முகநூலில்’ எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன்’ எனக் கூறினார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அதை நீக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை நீக்கினாலும், கட்சியினரிடத்தில் அலைபேசி வாயிலாக அரசியல் விலகலை அவர் தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News