×

கட்சி துவங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் – ரஜினி அதிரடி பேட்டி

தீவிர அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி இதுவரை தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. அதேநேரம், அவர் கூறியது போல் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை அவரின் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம், பிரதமர் மோடியை பாராட்டி அவர் பேசி வருவதால், ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்றே பலரும் அவரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ திருவள்ளுவருக்கு
 
கட்சி துவங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் – ரஜினி அதிரடி பேட்டி

தீவிர அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி இதுவரை தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை.

அதேநேரம், அவர் கூறியது போல் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை அவரின் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம், பிரதமர் மோடியை பாராட்டி அவர் பேசி வருவதால், ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்றே பலரும் அவரை விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல் எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள். இதில், வள்ளுவரும் மட்டமாட்டார். நானும் மட்ட மாட்டேன்.. பாஜகவில் இணைய எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை’ என அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த சரியான தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் இருக்கிறது எனவும் அரசியல் கட்சி துவங்கும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர் அப்படி பல படங்களில் நடித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News