×

நான் விஸ்வரூபம் எடுத்தால் காணாமல் போவாய் – தினகரனை விளாசும் தங்க தமிழ்ச்செல்வன் : வெளியான ஆடியோ

Thanga Tamilselvan – டிடிவி தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்க்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அமமுக படுதோல்வி அடைந்த பின், தினகரனின் வலது கரமாக விளங்கும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் அதிமுக அமைச்சர் தங்கமணி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எந்நேரத்திலும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் எனவும் செய்திகள் வெளியானது. தற்போது இதை
 
நான் விஸ்வரூபம் எடுத்தால் காணாமல் போவாய் – தினகரனை விளாசும் தங்க தமிழ்ச்செல்வன் : வெளியான ஆடியோ

Thanga Tamilselvan – டிடிவி தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்க்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அமமுக படுதோல்வி அடைந்த பின், தினகரனின் வலது கரமாக விளங்கும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

சமீபத்தில் அதிமுக அமைச்சர் தங்கமணி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எந்நேரத்திலும் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் எனவும் செய்திகள் வெளியானது. தற்போது இதை நிரூபிக்கும் வகையில், தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், உங்க அண்ணனை (தினகரன்) பொட்டத்தனமான அரசியலை செய்வதை நிறுத்த சொல்.. நான் விஸ்வரூபம் எடுத்தால் உங்கள் அண்னன், நீ அனைவரும் காணாமல் போவீர்கள்.. அவர் என்ன தேனியில் மீட்டிங் போடுவது.. நாளைக்கு நான் மதுரையில் மீட்டிங் போடுகிறேன். இப்படி பேடித்தனமான அரசியல் செய்வதை நிறுத்தச் சொல். இப்படி செய்தால் தோற்றுப்போவாய்.. என்றைக்கும் ஜெயிக்க மாட்டாய் எனச் சொல்” என அவர் கோபமாக பேசுவது அதில் பதிவாகியுள்ளது.

எனவே, ஏற்கனவே வெளியான செய்தி உண்மை என்பது தெரியவந்துள்ளது. மேலும், எப்போது வேண்டுமானாலும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News