×

பிளாஸ்டிக் விற்றால், வாங்கினால், சேமித்து வைத்திருந்தால் அபராதம் – தமிழக அரசு அதிரடி முடிவு !

தமிழகத்தில் பிளாஸ்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு குழுக்களை அமைத்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு ஆரம்பத்தில் மக்களிடம் இருந்தும் வியாபாரிகளிடம் இருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. ஆனால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அரசு எதையும் முன் வைக்காததால் வியாபாரிகளும் மக்களும் திண்டாடினர். இதையடுத்து மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு மெல்ல மெல்ல தலையெடுத்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை
 
பிளாஸ்டிக் விற்றால், வாங்கினால், சேமித்து வைத்திருந்தால் அபராதம் – தமிழக அரசு அதிரடி முடிவு !

தமிழகத்தில் பிளாஸ்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு குழுக்களை அமைத்துள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு ஆரம்பத்தில் மக்களிடம் இருந்தும் வியாபாரிகளிடம் இருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. ஆனால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அரசு எதையும் முன் வைக்காததால் வியாபாரிகளும் மக்களும் திண்டாடினர்.

இதையடுத்து மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு மெல்ல மெல்ல தலையெடுத்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன் படி வியாபாரிகள் பிளாஸ்டிக் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ரூ 25000 முதல் ஒரு லட்சம் வரையிலும் பொதுமக்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் நான்கு முறைக்கு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News