×

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

அமெரிக்காவில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி இந்தியா அமெரிக்கா நட்பு உச்சத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர் நேற்று ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் 50,000 இந்தியர்கள் முன்னிலையில் மோடி இந்தியர்கள் கலந்துகொண்டு பேசினார். அதில் ‘குட் மார்னிங் ஹூஸ்டன், அமெரிக்கா, நண்பர்களே… ட்ரம்புக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அரசியலை நிர்ணயிப்பவராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ட்ரம்பைச் சந்திக்கும்போது
 
வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

அமெரிக்காவில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி இந்தியா அமெரிக்கா நட்பு உச்சத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர் நேற்று ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் 50,000 இந்தியர்கள் முன்னிலையில் மோடி இந்தியர்கள் கலந்துகொண்டு பேசினார்.

அதில் ‘குட் மார்னிங் ஹூஸ்டன், அமெரிக்கா, நண்பர்களே… ட்ரம்புக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அரசியலை நிர்ணயிப்பவராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ட்ரம்பைச் சந்திக்கும்போது உற்சாகம் வருகிறது. இரு நாடுகளுக்கான நட்புறவு உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு இந்தியா உண்மையான நட்புடன் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்காகவே பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.தீவிரவாதிகளும் பிரிவினை வாதிகளும் அதைத் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். இப்போது அது தடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான  தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது. இதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன். நீங்கள் ‘ஹவ்டி மோடி’ எனக் கேட்கும்போது, இந்தியா மிக நலமாக இருக்கிறது எனச் சொல்லத் தோன்றுகிறது’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News