×

அதிமுக தொகுதி பங்கீடு – நினைத்ததை சாதித்த பிரேமலதா

LokSabha Election 2019 : அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக பாமகவிற்கு இணையாக தொகுதிகள் கேட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இறுதியில் 4 தொகுதிகளை தேமுதிக பெற்றது. ஆனால், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பிரேமலதா தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, கூட்டணி முடிந்தாலும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தரப்பில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில்தான் நேற்று முதல்வர் எடப்பாடி
 
அதிமுக தொகுதி பங்கீடு – நினைத்ததை சாதித்த பிரேமலதா

LokSabha Election 2019 : அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக பாமகவிற்கு இணையாக தொகுதிகள் கேட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இறுதியில் 4 தொகுதிகளை தேமுதிக பெற்றது. ஆனால், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பிரேமலதா தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, கூட்டணி முடிந்தாலும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தரப்பில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில்தான் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போதும், கள்ளக்குறிச்சி தொகுதியில் எங்களுக்கு வாக்கு வங்கி அதிகம். எனவே அந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கவில்லை எனில் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என பிரேமலதா முதல்வரிடம் கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி உங்களுக்குத்தான் என பிரேமலதாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக கூறப்படுகிறது.

இன்று காலையில் கூட்டணி கட்சிகளின் தொகுதியை அறிவித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்ன, விருது நகர் ஆகிய 4 தொகுதிகளும் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News