×

விஜயகாந்துக்கு இந்த நிலைமையா? – ஏலத்திற்கு வரும் வீடு மற்றும் கல்லூரி

Vijaykanth Properties – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் பெற்ற சில கோடிகள் கடன் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவற்றை ஏலத்திற்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தரப்பு சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ரூ.5.5 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அதை சரியாக கட்டாததால் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்திற்கு விட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று செய்தி
 
விஜயகாந்துக்கு இந்த நிலைமையா? – ஏலத்திற்கு வரும் வீடு மற்றும் கல்லூரி

Vijaykanth Properties –  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் பெற்ற சில கோடிகள் கடன் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவற்றை ஏலத்திற்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் தரப்பு சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ரூ.5.5 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அதை சரியாக கட்டாததால் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்திற்கு விட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று செய்தி தாளில் வெளியிட்டுள்ளது. அதில், சாலிகிராமத்தில் உள்ள வீடு, மாமண்டூரில் உள்ள கல்லூரி, சாலிகிராமத்தில் உள்ள 4,651 சதுர அடி நிலம் மற்றும் வணிக கட்டடம் ஆகியவற்றை ஜுலை 26ம் தேதி ஏலம் விடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் நிலுவை, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க ஏல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கடன் தொகையை செலுத்தும் பட்சத்தில் ஏலத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்துக்கு இந்த நிலைமையா? – ஏலத்திற்கு வரும் வீடு மற்றும் கல்லூரி

From around the web

Trending Videos

Tamilnadu News